ரெக்ஹைன் மாநில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரஹைன் மாநிலத்திற்காகக் கட்டப்பட்ட 200 வீடுகளை மியான்மரிடம் இந்தியா ஒப்படைக்கவுள்ளது.
2017-ன் பிற்பகுதியில் மியான்மரின் ரெக்ஹைன் மாநில மேம்பாட்டுத் திட்டத்தில் இந்தியா கையொப்பமிட்டது.
இந்தத் திட்டமானது இடம்பெயர்ந்தோருக்கான வீட்டுக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரக்ஹைன் மாநிலத்தில் உள்ள மியான்மர் அரசிற்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2017 முதல் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையின ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்திலிருந்து அண்டை நாடான வங்காள தேசத்திற்குத் தப்பிச் சென்று மாபெரும் அகதிகள் நெருக்கடியைத் உருவாக்கினர்.