TNPSC Thervupettagam

ரேடாருக்குப் புலப்படாத குண்டுவீச்சு விமானம் B-2 ஸ்பிரிட்

June 25 , 2025 14 hrs 0 min 16 0
  • அமெரிக்க விமானப்படையானது, ஈரானின் அணுசக்தித் தளங்களில் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்வதற்காக B-2 ஸ்பிரிட் எனப்படும் ரேடாருக்குப் புலப்படாத குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது, மிகப் பெரிதும் பலப்படுத்தப்பட்ட ஃபோர்டோ யுரேனிய வள இருப்பு மையம் உட்பட மூன்று இடங்களை குறி வைத்தது.
  • ஃபோர்டோ ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் "கிரீடம்" என்று அழைக்கப்பட்டது.
  • B-2 ஆனது எரிபொருள் நிரப்பாமல் 6,000 கடல் மைல்களுக்கும் (11,000 கிலோ மீட்டர்) அதிகமான தூரத்திற்குச் செயல்படும் ஒரு திறனைக் கொண்டுள்ளது என்பதோடு இது அமெரிக்காவிலிருந்து நீண்ட தூர தாக்குதல்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
  • இது 40,000 பவுண்டுகளுக்கும் (18,144 கிலோ) அதிகமான சுமையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
  • இதில் வழக்கமான மற்றும் அணு ஆயுதங்கள் ஆகிய இரண்டும் அடங்கும்.
  • அமெரிக்காவின் அணுசக்தி ஆயுத மும்மை அமைப்பின் ஒரு பகுதியாக B-2 ஆனது 16 B83 அணு குண்டுகளை ஏவக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்