ரேடாருக்குப் புலப்படாத குண்டுவீச்சு விமானம் B-2 ஸ்பிரிட்
June 25 , 2025 183 days 181 0
அமெரிக்க விமானப்படையானது, ஈரானின் அணுசக்தித் தளங்களில் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்வதற்காக B-2 ஸ்பிரிட் எனப்படும் ரேடாருக்குப் புலப்படாத குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது, மிகப் பெரிதும் பலப்படுத்தப்பட்ட ஃபோர்டோ யுரேனிய வள இருப்பு மையம் உட்பட மூன்று இடங்களை குறி வைத்தது.
ஃபோர்டோ ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் "கிரீடம்" என்று அழைக்கப்பட்டது.
B-2 ஆனது எரிபொருள் நிரப்பாமல் 6,000 கடல் மைல்களுக்கும் (11,000 கிலோ மீட்டர்) அதிகமான தூரத்திற்குச் செயல்படும் ஒரு திறனைக் கொண்டுள்ளது என்பதோடு இது அமெரிக்காவிலிருந்து நீண்ட தூர தாக்குதல்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
இது 40,000 பவுண்டுகளுக்கும் (18,144 கிலோ) அதிகமான சுமையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இதில் வழக்கமான மற்றும் அணு ஆயுதங்கள் ஆகிய இரண்டும் அடங்கும்.
அமெரிக்காவின் அணுசக்தி ஆயுத மும்மை அமைப்பின் ஒரு பகுதியாக B-2 ஆனது 16 B83 அணு குண்டுகளை ஏவக் கூடியது.