இத்தாலி நாட்டுப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அலுவல் முறையாக இந்தியா வந்துள்ளார்.
அவர் 8வது ரைசினா பேச்சுவார்த்தையின் (2023) தலைமை விருந்தினராகவும் முக்கிய பேச்சாளராகவும் வருகை புரிந்துள்ளார்.
ரைசினா பேச்சுவார்த்தை என்பது உலகத் தலைவர்களை ஒன்றிணைத்து பல்வேறு முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கும் பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவதற்குமாக நடத்தப் படும் ஒரு வருடாந்திர மாநாடு ஆகும்.
இது 2016 ஆம் ஆண்டு முதல் புது டெல்லியில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பின் (ORF) மூலம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.