கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தில் உள்ள லக்குண்டி கிராமத்தில் உள்ள கோட்டே வீரபத்ரேஸ்வரர் கோவிலில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய தொல்லியல் துறையின் (ASI) கண்டுபிடிப்புகளில் உடைந்த சாம்பல் நிற களிமண் பானை, ஒரு கற்கோடரி, சோழிகள், சிலுவை வடிவ பீடம் மற்றும் ஜீனரின் உருவம் செதுக்கப்பட்ட ஒரு கல் பீடம் ஆகியவை அடங்கும்.
வரலாற்று ரீதியாக லோக்கிக்குண்டி என்று அழைக்கப்பட்ட லக்குண்டி, 10 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளில் கல்யாணி சாளுக்கியர்கள் மற்றும் ஹொய்சாலர்களின் கீழ் ஒரு பிரதானமான மையமாக இருந்தது.
இந்தக் கண்டுபிடிப்புகள், வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் இடைக்காலத்தின் முற்பகுதி வரை தொடர்ச்சியான மனித வாழ்விடங்கள் இருந்ததைக் காட்டுகின்றன.