கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள லக்குண்டியில் மறைந்துள்ள நினைவிடங்களைக் கண்டறிய தொழில்நுட்ப அடிப்படையிலான ஆய்வு மேற் கொள்ளப் படவுள்ளது.
தொல்லியல், அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரியத் துறை (DAMH), பெங்களூருவில் உள்ள உயரிட ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனத்துடன் (NIAS) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தொழில்நுட்பங்களில் ஒளி கண்டறிதல் மற்றும் தூரம் அளவிடுதல் (LiDAR), புவியியல் தகவல் அமைப்பு (GIS), தொலை உணர்வு மற்றும் தரை ஊடுருவும் ரேடார் (GPR)ஆகியவை அடங்கும்.
தாவரங்களின் கீழ் மறைந்துள்ள அமைப்புகளைக் கண்டறிய ஆளில்லா விமான ஆய்வுகள் மற்றும் புகைப்பட அளவீடுகளும் பயன்படுத்தப்படும்.
கல்யாண சாளுக்கியர்களின் கீழ் 10 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் லக்குண்டி ஒரு முக்கிய நகர மையமாக இருந்தது.
இதன் கோயில்கள் நகரா, திராவிட மற்றும் பூமிஜா கட்டடக் கலை பாணிகளை இணைக்கும் வேசரா பாணியைக் காட்டுகின்றன.
லக்குண்டியை யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தற்காலிகப் பட்டியலில் முன்மொழிய கர்நாடகா விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்து வருகிறது.