முதலாவது இந்திய - ஆப்பிரிக்கப் பாதுகாப்பு அமைச்சரின் மாநாட்டில் இந்தியாவும் 50 ஆப்பிரிக்க நாடுகளும் லக்னோ பிரகடனத்தை ஏற்றுக் கொண்டன.
லக்னோவில் நடந்து வரும் டெஃப்எக்ஸ்போ 2020 இன் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெற்றது.
லக்னோ பிரகடனமானது அமைதி மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாதம், கடல்சார் பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றியதாகும்.
AFINDEX பற்றி
லக்னோ பிரகடனமானது ஆப்பிரிக்க-இந்தியக் களப்பணி பயிற்சிகள் (AFINDEX) தொடங்கப் படுவதைப் பாராட்டியதுடன், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளது.
முதன்முதலில் AFINDEX ஆனது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது.