லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பின் சான்றிதழ் வழங்கீடு
November 22 , 2022 1005 days 649 0
இந்திய எஃகு ஆணைய நிறுவனமானது (SAIL) லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பை (ABMS) செயல்படுத்திய முதல் மகாரத்னா பொதுத் துறை நிறுவனம் என்ற ஒரு பெருமையைப் பெற்றுள்ளது.
லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பு என்பது ISO 37001:2016 என்ற தர நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப் பட்ட ஒரு மேலாண்மை அமைப்பாகும் என்பதோடு அது லஞ்ச நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும், அதைக் கண்டறிவதற்கும் மற்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் உதவுகிறது.
டெல்லியில் உள்ள இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் பெரு நிறுவன அலுவலகம் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் பொகாரோ எஃகு ஆலைக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.