September 19 , 2026
2 days
61
- சான்ஸ்காரில் உள்ள குமிக் கிராமமானது 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று லடாக்கின் முதல் பாரம்பரிய கிராமமாக அறிவிக்கப்பட்டது.
- குமிக் கிராமமானது பாரம்பரிய மண் வீடுகள், புனித இடங்கள், விவசாய நடைமுறைகள் மற்றும் பௌத்த மரபுகளுக்கு பெயர் பெற்றது.
- இந்தக் கிராமத்தில் திபெத்தியப் பாரம்பரியத்தில் நியமன பௌத்த நூல்களின் தொகுப்பான கஞ்சூர் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன.
- சான்ஸ்கார் என்பது திபெத்திய பௌத்த மடாலயங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் வாய்வழி மரபுகளுக்குப் பெயர் பெற்ற அதிக உயரமான இமயமலைப் பகுதி ஆகும்.
- பாரம்பரிய கிராமம் என்ற அந்தஸ்து பாரம்பரிய கட்டிடக்கலை, கலாச்சார நடைமுறைகள் மற்றும் உள்ளூர் பாரம்பரியத்தை பாதுகாப்பதை ஆதரிக்கிறது.
Post Views:
61