TNPSC Thervupettagam

லடாக்கிற்கான அரசியலமைப்பு பாதுகாப்பு

September 11 , 2026 2 days 45 0
  • லடாக்கிற்கு அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் அதிக உள்ளூர் சுயாட்சியை வழங்குவதற்காக புதிய சரத்து 371(K)-ஐ மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
  • முன்மொழியப்பட்ட இந்த விதியானது நிலம், கலாச்சாரம் மற்றும் மொழி, காடுகள், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் மீது சட்டமன்ற அதிகாரங்களைக் கொண்ட நேரடித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியப் பிரதேச அளவிலான ஆளும் அமைப்பை உருவாக்கலாம்.
  • அரசியலமைப்பின் 240 ஆவது சரத்தின் கீழ் தற்போது ஒன்றியப் பிரதேசத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள விஷயங்கள் மீதும் முன்மொழியப்பட்ட இந்த அமைப்பு அதிகாரங்களைக் கொண்டிருக்கலாம்.
  • சரத்து 240 ஆனது சில ஒன்றியப் பிரதேசங்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நல்ல அரசாங்கத்திற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கான அதிகாரத்தை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது.
  • காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு மீதான கட்டுப்பாடு உட்பட கூடுதல் நிர்வாக, பட்ஜெட், திட்டமிடல் மற்றும் நிதி அதிகாரங்களை லடாக் கோரியுள்ளது.
  • முன்மொழியப்பட்ட சரத்து 371(K) இன் வரைவு அக்டோபர் மாதத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது கூடுதல் விவாதங்கள் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்