TNPSC Thervupettagam

லடாக் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணை கோரிக்கை

March 19 , 2026 2 days 47 0
  • லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து, பொதுப் பணியாளர் தேர்வாணையம் (PSC) மற்றும் அதிக பிரதிநிதித்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி லே மற்றும் கார்கில் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
  • ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-க்குப் பிறகு, லடாக் சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசமாக மாறியது என்பதோடு இது "பிரதிநிதித்துவப் பற்றாக்குறைக்கு" வழி வகுத்தது.
  • அங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 97% பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் நிலம், கலாச்சாரம் மற்றும் நுணுக்கமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கக் கோருகின்றனர்.
  • தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்களை (ADCs) அமைப்பதற்காக, இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் (சரத்து 244(2)) லடாக்கைச் சேர்க்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • தற்போது ஆறாவது அட்டவணை அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் பழங்குடியினப் பகுதிகளுக்குப் பொருந்தும்.
  • சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளைக் கொண்டிருப்பதால் ஏற்படும் மூலோபாயப் பாதுகாப்பு கவலைகள் மற்றும் அரசியலமைப்புச் சவால்களும் இதில் அடங்கும்.
  • லடாக் இட ஒதுக்கீடு (திருத்தம்) ஒழுங்குமுறை 2025, உள்ளூர் மக்களுக்கு 85% இட ஒதுக்கீடு மற்றும் இருப்பிட அடிப்படையிலான பாதுகாப்புகளை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்