லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியான பிரஃபுல் கோடா படேல் அவர்களின் சமீபத்திய கொள்கைகளுக்கு லட்சத்தீவின் மக்களும் அரசியல்வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
நில உரிமையாளர்களை வெளியேற்றுதல் போன்ற பரவலான அதிகாரங்களுடன் லட்சத்தீவு மேம்பாட்டு ஆணையமானது சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
எந்தவொரு பகுதிக்கான விரிவான மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கவும் நகரத் திட்டமிடல் அல்லது எந்தவொரு மேம்பாட்டு நடவடிக்கைக்காகவும் லட்சத்தீவில் வாழும் மக்களை அவர்களுடைய பகுதியிலிருந்து வெளியேற்றவோ (அ) வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்கோ வேண்டி இந்தச் சட்டமானது அந்த ஆணையத்திற்கு ஒரு அதிகாரத்தினை அளிக்கிறது.
மனை விற்பனை நிறுவனங்களின் அழுத்தத்திற்கு இணங்க அந்தத் தீவில் வாழும் மக்களுக்கு எதிராக இந்த ஆணையம் செயல்படுவதாக எதிர்ப்புகள் வருகின்றன.
மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சமூக எதிர்ப்பு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமும் அறிமுகப் படுத்தப்பட்டது.
இதன்படி, எந்தவொரு பொது அறிவிப்பும் இன்றி ஒரு நபரை ஓராண்டு வரை காவலில் வைத்திருக்க இயலும்.
குறிப்பு
இந்திய அரசியல்வாதியான பிரஃபுல் கோடா படேல் அவர்கள் தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ மற்றும் லட்சத்தீவு ஆகிய ஒன்றியப் பிரதேசங்களின் நிர்வாக அதிகாரி எனும் பொறுப்பினை வகிக்கிறார்.
தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூவின் முதல் நிர்வாக அதிகாரியும் இவரே ஆவார்.
இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகளை நிர்வாக அதிகாரியாக நியமிக்கும் முந்தைய வழக்கத்திற்கு மாறாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டார்.
நிர்வாக அதிகாரிகள் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.