TNPSC Thervupettagam

லம்பாடா பழங்குடியினர்

January 26 , 2026 14 hrs 0 min 27 0
  • தெலுங்கானாவில் உள்ள லம்பாடா சமூகத்தின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்து குறித்த பிரச்சினை மீண்டும் உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது.
  • பஞ்சாரர்கள் என்றும் அழைக்கப்படும் லம்பாடிகள், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காணப்படும் ஒரு பழங்குடியினச் சமூகமாகும்.
  • அவர்கள் பாரம்பரியமாக தானியங்கள் மற்றும் உப்பு போன்ற பொருட்களை கொண்டு செல்லும் நாடோடி வணிகர்களாக இருந்தனர்.
  • அவர்கள் லம்பாடி என்றும் அழைக்கப்படும் இந்தோ-ஆரிய மொழியான கோர் போலி மொழியைப் பேசுகிறார்கள்.
  • லம்பாடிகள் நாயக் என்ற கிராமத் தலைவரின் தலைமையில் தாண்டாக்கள் என்று அழைக்கப்படும் தனித்தனி குக்கிராமங்களில் வாழ்கின்றனர்.
  • சில மாநிலங்களில் அவர்கள் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினராக அங்கீகரிக்கப் படுகிறார்கள் என்ற நிலையில் மற்றவற்றில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) என வகைப்படுத்தப் படுகிறார்கள்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்