August 25 , 2025
                                                                          71 days 
                                      97
                                    
                                   
								   
                                
                                
                                    
	- லார்ட் ஸ்வராஜ் பால் இலண்டனில் காலமானார்.
 
	- 1931 ஆம் ஆண்டில் ஜலந்தரில் பிறந்த பால், 1960 ஆம் ஆண்டுகளில் ஐக்கியப் பேரரசிற்கு குடிபெயர்ந்தார்.
 
	- குழந்தைகள் நலனை ஆதரிப்பதற்காக தனது மகளின் நினைவாக அம்பிகா பால் அறக்கட்டளையை நிறுவினார்.
 
	- பால் அவர்கள், ஐக்கியப் பேரரசில் கபாரோ குழுமத்தை நிறுவி ஒரு குறிப்பிடத்தக்க வெளிநாடு வாழ் இந்தியத் (NRI) தொழிலதிபரானார்.
 
	- 1978 ஆம் ஆண்டில், ஸ்வராஜ் பவுலுக்கு பிரிட்டிஷ் ராணி நைட்ஹூட் பட்டம் வழங்கினார் என்பதோடு பின்னர் ஐக்கியப் பேரரசின் பிரபுக்கள் சபையின் உறுப்பினரானார்.
 
	- 1983 ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
 
	- 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை, அவர் இந்தோ-பிரிட்டிஷ் வட்டமேசை மாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்கினார்.
 
	- ஐக்கியப் பேரரசு, அமெரிக்கா, இந்தியா, சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக் கழகங்களிலிருந்து மொத்தம் 15 கௌரவப் பட்டங்களை அவர் பெற்று உள்ளார்.
 
 
                                 
                            
                                
                                Post Views: 
                                97