லித்தியம் அயனி மின்கலத்தின் இணை கண்டுப்பிடிப்பாளர்
July 1 , 2023 767 days 434 0
லித்தியம் அயனி மின்கலத்தினை உருவாக்கியப் பணிக்காக என்று புகழ் பெற்ற ஜான் குட்எனஃப் சமீபத்தில் அமெரிக்காவில் காலமானார்.
லித்தியம் அயனி மின்கலத்தினை உருவாக்கியப் பணிக்காக, 2019 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றவர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.
நோபல் பரிசு பெற்ற மிக வயதான நபர் குட்எனஃப் ஆவார்.
அவர் பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க அறிவியலாளரான M. ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டார்.
இத்தகைய முதல் வகை இலகுரக, பாதுகாப்பான, நீடித்து உழைக்கும் மற்றும் மீண்டும் மின்னேற்றம் செய்யக் கூடிய வணிக ரக மின்கலங்கள் 1991 ஆம் ஆண்டில் சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்டன.