இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பானது அரசின் ஆற்றல் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஏழு லித்தியம் ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
இராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் அணுசக்தி கனிமங்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான இயக்குநரகத்தினால் லித்தியம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பு
லித்தியம் அயனி மின்கலன்களின் தயாரிப்பு மற்றும் இதரப் பயன்பாடுகளுக்கு இந்தியாவில் போதுமான அளவு லித்தியம் வளங்கள் இல்லை.
பெரும்பாலான லித்தியம் மின்கலன்கள் நாட்டினுள் இறக்குமதி செய்யப்படுகின்றன.