லில்லி சிங் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் நல்லெண்ணத் தூதராகத் தேர்வு
July 19 , 2017 2975 days 1404 0
நகைச்சுவை நடிகை , மற்றும் எழுத்தாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டுப் பெண்மணி லில்லி சிங், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (United Nations Children's Fund - UNICEF/ யுனிசெப்) புதிய நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இணையதள உலகில் "சூப்பர்வுமன்" என்று பிரபலமாக அழைக்கப்படும் லில்லி, இந்தியாவில் யுனிசெப் ஆதரவளிக்கும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை சந்தித்து உரையாடினர்.
குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி எடுத்துரைக்க லில்லி தனக்குரிய தனித்துவமான டிஜிட்டல் முன்னிலையைப் (Digital Presence) பயன்படுத்த இருக்கிறார் .
லில்லி , யூ-டியுப் உலகில் சுமார் மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பிரபலம் ஆவார். இவரது “How To Be A Bawse: A Guide to Conquering Life” என்ற புத்தகம் உலகப் புகழ் பெற்றது ஆகும்.
ஜூன் மாதம் ஃபோர்ப்ஸ் இதழ் பொழுதுபோக்கு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலை வெளியிட்டது . இதில் லில்லி சிங் முதல் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.