முன்பண வழங்கீட்டுக் கருவி (PPI - prepaid payment instrument) தயாரிப்பு நிறுவனமான லிவ்குயிக், ரிசர்வ் வங்கியின் ஆணையின் படி, அதன் முன்பண வழங்கீட்டுக் கருவிகளுக்கான ஒரு முழு இயங்கும் தன்மையை அடைந்துள்ளதாக அறிவித்தது.
இந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு முழு இயங்குநிலையை அடைந்த முதல் முன் பண வழங்கீட்டுக் கருவித் தயாரிப்பு நிறுவனம் இதுவாகும்.
லிவ்குயிக் என்பது மும்பையைச் சேர்ந்த நிதித் தொழில்நுட்ப ரீதியிலான ஒரு புத்தாக்க நிறுவனம் ஆகும்.