TNPSC Thervupettagam

லுங்ஃபூன் ரோபுய் மென்ஹிர்கள்/நெடுங்கல் – மிசோரம்

July 23 , 2025 4 days 41 0
  • சம்பாய் மாவட்டத்தின் லியான்ஃபூய் கிராமத்தில் உள்ள லுங்ஃபூன் ரோபுய் மென்ஹிர்கள்/நெடுங்கல் ஆனது இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையால் (ASI) அதிகாரப் பூர்வமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நினைவுச் சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இதற்கான முறையான அறிவிப்பை கலாச்சார அமைச்சகம் வெளியிட்டது.
  • இந்தப் பழங்கால கலைப் பொருட்களில் 114 சிக்கலாக செதுக்கப்பட்ட நினைவுக் கற்கள், மானுடத் துளைகள், பாறை ஓவியங்கள், Y - வடிவ மரத் தூண்கள் மற்றும் பழங்காலப் பாதைகள் ஆகியன அடங்கும்.
  • மிசோரமில் இந்த அங்கீகாரத்தைப் பெற்ற இரண்டாவது மென்ஹிர்கள்/நெடுங்கல் தளம் இதுவாகும்.
  • முதலாவது அங்கீகாரம் வாங்ச்சியா கிராமத்தில் உள்ள காவ்ச்சுவா ரோபுய் அல்லது பெரிய நுழைவாயில் என்றழைக்கப்படும் பகுதிக்கு வழங்கப்பட்டது.
  • இது சுமார் 170க்கும் மேற்பட்ட பொறிப்புகளைக் மென்ஹிர்களை/நெடுங்கற்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்