லெபனான் – கஞ்சாச் சாகுபடி (Marijuana)
April 29 , 2020
1924 days
844
- கஞ்சாச் சாகுபடியைச் சட்டப்பூர்வமாக்கிய முதலாவது அரபு நாடு லெபனான் ஆகும்.
- கஞ்சாச் செடியானது லெபனானில் உள்ள வளமான பீக்கா பள்ளத்தாக்கில் சட்ட விரோதமாக பயிரிடப்பட்டு வந்தது.
- ஐக்கிய நாடுகள் அமைப்பின்படி, மொராக்கோ மற்றும் ஆப்கானிஸ்தானிற்குப் பிறகு உலகின் 3வது மிகப்பெரிய கஞ்சா பிசின் விநியோக நாடு லெபனான் ஆகும்.
- லெபனான் நாட்டைத் தவிர, தங்க முக்கோணப் பகுதி மற்றும் தங்கப் பிறைப் பகுதி ஆகியவை இந்த அபினி (opium) உற்பத்தியில் பங்கு கொண்டுள்ளன.
- தங்கப் பிறைப் பகுதியானது ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது.
- வரைபடத்தில் இந்த நாடுகள் இணைந்து பிறை வடிவத்தை உருவாக்குவதனால், இதற்கு தங்கப் பிறை என்று பெயரிடப் பட்டுள்ளது.
- தங்க முக்கோணமானது தாய்லாந்து, மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது.
- ருவாக் மற்றும் மெக்காங் ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்தப் பகுதிகள் சந்திப்பதால், இதற்கு தங்க முக்கோணம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Post Views:
844