TNPSC Thervupettagam

லெவரேஜ் விகித கட்டமைப்புத் திருத்தம்

October 28 , 2026 3 days 75 0
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பேசல் வங்கி மேற்பார்வைக் குழுவின் (BCBS) தர நிலைகளுடன் ஒத்துப் போகும் வகையில் தனது மூலதனப் போதுமான அளவு கட்டமைப்பை திருத்தியுள்ளது, புதிய லெவரேஜ் விகித விதிகள் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
  • உள்நாட்டு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கான (D-SIBs) குறைந்தபட்ச லெவரேஜ் விகிதம் 4% ஆகவும் மற்ற வங்கிகளுக்கு 3.5% ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • லெவரேஜ் விகிதம் என்பது சொத்துகளின் அபாயங்களைக் கருத்தில் கொள்ளாமல், வங்கியின் மொத்த வெளிப்பாடுகளுக்கு எதிரான அதன் முக்கிய மூலதனத்தை அளவிடுவதாகும்.
  • இருப்புநிலைக் குறிப்புச் சொத்துக்கள், வழித்தோன்றல்கள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பு இல்லாத வெளிப்பாடுகள் உள்ளிட்டவற்றுடன் வங்கிகள் எப்போதும் குறைந்தபட்ச விகிதத்தை பராமரிக்க வேண்டும்.
  • இந்தக் கட்டமைப்பானது அபாய எடை கொண்ட மூலதனத் தேவைகளுக்கான ஒரு தடுப்பாகச் செயல்படுவதுடன் வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்பின் பின்னடைவுத் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • திருத்தப்பட்ட கட்டமைப்பைச் செயல்படுத்தக் கூடுதல் கால அவகாசம் கோரிய வங்கிகளின் கோரிக்கையை RBI நிராகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்