லோக்டக் உள்நாட்டு நீர்வழித் திட்டம் - மணிப்பூர்
November 30 , 2019
1998 days
787
- மணிப்பூரில் உள்ள லோக்டக் உள்நாட்டு நீர்வழித் திட்டத்திற்கு மத்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- மிதக்கும் ஃபும்டிஸுக்குப் பிரபலமான லோக்டக் ஏரியானது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும்.
- லோக்டக் ஏரியில் மட்டுமே பிரத்தியேகமாக உள்ள ஃபும்டிஸ் என்பது ஒரு மிதக்கும் தீவு வரிசையின் தொடராகும்.
- ஃபும்டிஸின் ஒரு மிகப்பெரிய ஒற்றைத் திட்டானது 40 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டுக்களைக் கொண்ட கெய்புல் லம்ஜாவோ தேசியப் பூங்காவானது உலகின் மிகப்பெரிய மிதக்கும் பூங்காவாக உள்ளது.
- இந்த ஏரி மணிப்பூரில் மொய்ராங் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. மேலும் இது அருகி வரும் உயிரினமான சாங்காய் மான்களின் வாழ்விடமாக உள்ளது.
Post Views:
787