வங்காளதேசக் கடற்படையின் முதல் சர்வதேச கடற்படை ஆய்வு
December 20 , 2022 971 days 458 0
வங்காளதேசக் கடற்படையானது தனது முதல் சர்வதேசக் கடற்படை மதிப்பாய்வை மேற்கொள்கிறது.
அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் அண்டை நாடான மியான்மர் உள்ளிட்ட சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த கடற்படைத் தளபதிகள், கப்பல்கள் இந்த சர்வதேச நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
கொச்சி, கவராத்தி மற்றும் சுமேதா ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்கள் இதில் பங்கேற்க உள்ளன.
இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில், பல்வேறு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான உறவுகளை இன்னும் மேம்படுத்தச் செய்வதே இந்தப் பயிற்சி மேற் கொள்ளப் படுவதன் ஒரு முக்கிய நோக்கமாகும்.