TNPSC Thervupettagam

வங்காளதேசம் – 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்ட உயர்வு

September 17 , 2021 1435 days 644 0
  • வங்காளதேசத்தின் 17% நிலப்பகுதியானது 2050 ஆம் ஆண்டுக்குள் கடல்மட்ட உயர்வு காரணமாக கடலில் மூழ்கடிக்கப் படும்.
  • ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மிச்செல் பச்செல்லட், மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தில் உரை ஆற்றிய போது உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையை மேற்கோளிட்டுக் காட்டினார்.
  • இந்த அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டின் பேரிடர்களின் போது தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் வங்காளதேசம் 3வது இடத்தில் உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு பேரிடரின் காரணமாக மக்கள் இடம் பெயர்வதற்கான நிலையை எதிர்கொண்ட மற்ற நாடுகள் இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்