வங்காளதேசம் – 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்ட உயர்வு
September 17 , 2021 1522 days 688 0
வங்காளதேசத்தின் 17% நிலப்பகுதியானது 2050 ஆம் ஆண்டுக்குள் கடல்மட்ட உயர்வு காரணமாக கடலில் மூழ்கடிக்கப் படும்.
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மிச்செல் பச்செல்லட், மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தில் உரை ஆற்றிய போது உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையை மேற்கோளிட்டுக் காட்டினார்.
இந்த அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டின் பேரிடர்களின் போது தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் வங்காளதேசம் 3வது இடத்தில் உள்ளது.
2019 ஆம் ஆண்டு பேரிடரின் காரணமாக மக்கள் இடம் பெயர்வதற்கான நிலையை எதிர்கொண்ட மற்ற நாடுகள் இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியனவாகும்.