வங்காளதேசம் தனது 13வது நாடாளுமன்றத் தேர்தலை பிப்ரவரி 2026 இல் நடத்தியது என்பதோடுஇது ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தை அகற்றிய 2024 ஆம் ஆண்டு வெகு ஜன எழுச்சிக்குப் பிறகு நடந்த முதல் தேசிய அளவிலான தேர்தலாகும்.
வங்காளதேச தேசியவாதக் கட்சி (BNP) மகத்தான வெற்றியைப் பெற்று, நாடாளுமன்றத்தில் வலுவான பெரும்பான்மையைப் பெற்றது.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பிஎன்பி கட்சியின் தலைவருமான தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
நாட்டின் முதல் பெண் பிரதமரான அவரது தாயார் கலீதா ஜியாவைத் தொடர்ந்து, பல தசாப்தங்களில் ரஹ்மான் வங்காளதேசத்தின் முதல் ஆண் பிரதமராக வருவார்.
அவர் டிசம்பர் 2025 இல் இறந்தார்.
அவரது தந்தை ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான் 1975 இல் ஆட்சியைப் பிடித்து வங்காள தேசத்தின் ஜனாதிபதியானார், பின்னர் 1981 இல் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
2024 ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடிக்குப் பிறகு, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகத்தால் நாடு நிர்வகிக்கப்பட்டு வந்தது.
2025 ஜூலை மாத்தில், "ஜூலை சாசனம்" என்று அழைக்கப்படும் அரசியலமைப்பு வாக்கெடுப்புக்கு வங்காளதேசம் ஒப்புதல் அளித்துள்ளது.
1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு கட்டமைப்பை மாற்றுவதற்கான முக்கிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை இந்த வாக்கெடுப்பு முன்மொழிந்தது.
அரசியலமைப்பு, நீதித்துறை, தேர்தல் முறைமை, காவல்துறை, பொது நிர்வாகம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திய ஆறு சீர்திருத்த ஆணையங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், இடைக்கால அரசாங்கத்தின் தேசிய ஒருமித்த ஆணையத்தால் இந்த சாசனம் வரைவு செய்யப்பட்டது.
பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், பிரதமர் பதவிக்காலத்தின் மீது வரம்புகளை விதித்தல், ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரித்தல், அடிப்படை உரிமைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகியவை முக்கிய சாசனச் சீர்திருத்தங்களில் அடங்கும்.
இந்த வாக்கெடுப்பு மக்கள் அரசு நிறுவனங்களுக்கான சீர்திருத்தங்களில் வாக்களிக்க ஒரு வாய்ப்பை வழங்கும்.
நேரடி ஜனநாயகத்தில் ஒரு வாக்கெடுப்பு என்பது ஒரு வாக்களிப்பு செயல்முறை ஆகும் என்பதோடுஇதில் குடிமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் மட்டுமே முடிவுகளை விட்டு விடுவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சட்டங்கள், அரசியலமைப்பு திருத்தங்கள் அல்லது கொள்கைகளை நேரடியாக ஏற்றுக் கொள்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள்.