TNPSC Thervupettagam

வங்காள விரிகுடாவில் ஓசோன் முரண்பாடு

August 12 , 2026 21 hrs 0 min 60 0
  • வடக்கு வங்காள விரிகுடாவிற்கு மேல் 21-23 கி.மீ உயரத்தில் வழக்கத்திற்கு மாறாக ஒரு தடிமனான ஓசோன் படலத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • கிழக்கு இந்தியாவின் மீது ஓசோன் செறிவானது இயல்பை விட அதிகமாக இருந்ததுடன், அந்தப் படலம் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்திருந்தது.
  • நைனிடாலில் உள்ள ஆரியபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (ARIES) மற்றும் பிற இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த அறிவியலாளர்கள், முதல் கட்ட NetRAD-ASMA பிரச்சாரத்தின் கீழ் இந்த நிகழ்வை ஆய்வு செய்தனர்.
  • இந்த ஆய்வில் 206.5 மெகா ஹெர்ட்ஸ் அடுக்குமண்டல- அடிவளிமண்டல (ST) ரேடார்கள், வானிலை பலூன்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் வளிமண்டல மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன.
  • கீழ் அடுக்குமண்டலத்தில் தொடர்ச்சியான கீழ்நோக்கிய காற்று இயக்கம் மற்றும் ஓசோன் நிறைந்த காற்றின் இடமாற்றம் ஆகியவற்றை கண்காணிப்புகள் காட்டுகின்றன.
  • கிடைமட்டமான ஓசோன் இடமாற்றம், கீழ்நோக்கிய இயக்கம் மற்றும் காற்றின் சுருக்கம் ஆகியவை இந்த அசாதாரண ஓசோன் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்று அறிவியலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்