வங்காள விரிகுடாவில் (இந்தியப் பெருங்கடல்) இரண்டு சூறாவளிப் புயல்கள் உருவாகின்றன.
அருகிலுள்ள இரண்டு புயல்கள் ஒரு பொதுவான மையத்தைச் சுற்றி சுழலும் போது ஃபுஜிவாரா விளைவு ஏற்படுகிறது.
இரு புயல்கள் 1,400 கிலோமீட்டருக்குள் இருக்கும் போது மற்றும் ஒரே திசையில் (வடக்கு அரைக்கோளத்தில் எதிர்-கடிகார திசையில்) சுழலும் போது இது பெரும்பாலும் நிகழ்கிறது.
புயல்களின் தொடர்பு ஆனது ஒன்றிணைய, தீவிரமடைய, மெதுவாக்க அல்லது பாதைகளை மாற்ற வழி வகுக்கும்.
நீடித்த தொடர்பு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், இலங்கை மற்றும் மியான்மரில் மழை மற்றும் வெள்ள அபாயத்தை அதிகரிக்கிறது.