TNPSC Thervupettagam

வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) சட்டம் 2025

August 4 , 2025 10 days 100 0
  • வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) சட்டம் 2025 ஆனது, நிர்வாகத்தை மேம்படுத்தவும், வைப்புத் தொகையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களைப் பாதுகாக்கவும் ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
  • இந்தச் சட்டமானது, பொதுத்துறை வங்கிகளில் தணிக்கைத் தரத்தினை மேம்படுத்துவதோடு, தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர்களைத் தவிர கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கிறது.
  • 1968 ஆம் ஆண்டிலிருந்து மாற்றப்படாமல் இருந்த "கணிசமான வட்டி" வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர் பதவிக் காலம் ஆனது 8 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதோடு இது 97வது அரசியலமைப்புத் திருத்தத்துடன் ஒத்துப் போகிறது.
  • இந்தச் சட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 மற்றும் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 உட்பட ஐந்து சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட 19 திருத்தங்கள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்