வங்கிச் செயல்பாடுகளை 100 சதவீதம் எண்ணிம மயமாக்குதல்
October 1 , 2022 1109 days 601 0
லே மாவட்ட நிர்வாகமானது வங்கிச் செயல்பாடுகளில் 100 சதவீத எண்ணிம மயமாக்கல் என்ற இலக்கினை எட்டியுள்ளது.
எண்ணிம அடிப்படையிலான வங்கிச் சேவை என்பது ஒரு வங்கி தனது நிதி, வங்கி மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்காக மின்னணு சாதனங்கள் மூலம் இணைய வழியில் வழங்கும் மின்னணு வங்கிச் சேவையைக் குறிக்கிறது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டமானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் முதலாவது முழுமையான எண்ணிம வங்கிச் சேவை கொண்ட மாவட்டமாக மாறியது.
ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவராவது வங்கிக் கணக்கை வைத்திருக்க வேண்டும் என்ற நிதி உள்ளடக்க இலக்கை எட்டிய இந்தியாவின் முதல் மாநிலமாகவும் கேரளா திகழ்கிறது.