1969 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதின் 50வது ஆண்டை இந்தியா அனுசரிக்கின்றது.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கடனளிக்கும் முக்கியமான 14 வங்கிகளின் தேசிய மயமாக்கத்தைத் தொடங்கி வைத்தார். நாட்டில் உள்ள மொத்த வங்கி வைப்பு நிதியில் 85 சதவிகித வைப்பு நிதியை இந்த வங்கிகள் கொண்டுள்ளன.
வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பொதுத் துறைப் பரிமாற்றம்) அவசரச் சட்டம், 1969-ன் கீழ் இந்த வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இந்த அவசரச் சட்டம் பின்னர் மசோதாவாக மாறியது.
பின்னர் 1980 ஆம் ஆண்டில் மேலும் 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
பெரிய வணிகங்கள் கடன் வழங்குதலில் ஆதிக்கம் செலுத்திய அந்த நேரத்தில் முன்னுரிமைத் துறைகளை ஊக்கப்படுத்துவது என்பது தேசியமயமாக்கலின் முக்கியக் குறிக்கோளாகும்.
இந்தியாவில் மிகப்பெரிய கடனளிக்கும் வங்கி பாரத ஸ்டேட் வங்கியாகும்.