TNPSC Thervupettagam

வஜ்ரா-சாட் (VAJRA-SAT) பயிற்சி

November 14 , 2026 8 hrs 0 min 28 0
  • இந்தியாவில் கோமாரி நோய் (Foot-and-Mouth Disease - FMD) வைரஸின் 'SAT-1' வகை உட்புகுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை (DAHD) மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் (ICAR) கீழ் இயங்கும் 'தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனம்' (NIVEDI) ஆகியவை இணைந்து, பெங்களூருவில் இரண்டு நாள் 'VAJRA-SAT' பயிற்சியை நடத்தின.
  • "Detect Early, Confirm Fast, Contain Together" என்பது இதன் கருத்துருவாகும்.
  • இந்தப் பயிற்சியானது நோயைக் கண்டறிதல், ஆய்வக நோயறிதல், தொற்றுநோயியல் விசாரணைகள், விலங்குகளின் நடமாட்டக் கட்டுப்பாடுகள், அவசரகால தடுப்பூசி மற்றும் ஆபத்துத் தொடர்பு ஆகியவற்றை சோதித்தது.
  • கோமாரி நோய் (FMD) என்பது இரட்டைக்குளம்பு கொண்ட விலங்குகளைப் பாதிக்கும் மிகவும் தொற்றக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும். இது கோமாரி நோய் வைரஸால் (FMDV) ஏற்படுகிறது.
  • இது O, A, C, SAT-1, SAT-2, SAT-3 மற்றும் ஆசியா-1 ஆகிய ஏழு சீரோடைப்களைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் O, A மற்றும் ஆசியா-1 ஆகியவை மட்டுமே பதிவாகியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்