சமீபத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சிறப்புப் படைகள் ‘வஜ்ர பிரகார் 2021’ எனும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொண்டன.
இப்பயிற்சி இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்றது.
இணைந்து திட்டமிடுதல் மற்றும் செயல்பாட்டு உத்திகள் போன்ற துறைகளில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் இரு நாடுகளின் சிறப்புப் படைகளின் இயங்குதிறனை மேம்படுத்துதல் போன்றவை இப்பயிற்சியின் நோக்கங்களாகும்.
இரு நாடுகளின் சிறப்புப் படைகளின் இந்தக் கூட்டுப் பயிற்சியானது ஒருமுறை இந்தியா என்ற முறையிலும் மற்றொரு முறை ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்ற முறையிலும் மேற்கொள்ளப் படும்.
சிறப்புப் படைகள் என்பது ரகசியமான, தீவிரவாத எதிர்ப்பு மற்றும் மற்ற பிற சிறப்புச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு நாட்டின் ஆயுதப் படைகளாகும்.
இமாச்சலப் பிரதேசத்திலுள்ள பக்லோவில் அமைந்துள்ள சிறப்புப் படைகள் பயிற்சிப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயிற்சி 11வது கூட்டுப் பயிற்சியாகும்.
10வது வஜ்ர பிரகார் பயிற்சி 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள சியாட்டிலில் நடத்தப் பட்டது.