வடகிழக்கின் முதல் புவிவெப்ப ஆற்றல் உற்பத்திக் கிணறு
May 10 , 2025 2 days 36 0
புவி அறிவியல் மற்றும் இமயமலை ஆய்வுகளுக்கான மையம் (CESHS) ஆனது, திராங் பகுதியில் வடகிழக்குப் பிராந்தியத்தின் முதல் புவிவெப்ப ஆற்றல் மீதான உற்பத்திக் கிணற்றை வெற்றிகரமாக அகழ்ந்துள்ளது.
இது அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
திராங் என்பது 115°C என்ற மதிப்பிடப்பட்ட தேக்க வெப்பநிலையுடன் கூடிய நடுத்தரம் முதல் அதிகளவிலான தொகுவெப்பம் கொண்ட புவி வெப்ப மண்டலமாகும்.
இது நேரடியானப் பயன்பாட்டுப் புவி வெப்பப் பயன்பாடுகளுக்கு வேண்டி மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.
வெப்ப விசையியக்கக் குழாய்கள் மூலம் கட்டிடங்களை மிகவும் சூடாக்குவதற்கும் குளிர்விப்பதற்கும், மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கும், நேரடிப் பயன்பாடுகள் மூலம் கட்டமைப்புகளை நேரடியாக வெப்பப் படுத்துவதற்கும் புவி வெப்ப ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.