TNPSC Thervupettagam

வடகிழக்குப் பருவமழையின் முடிவு

January 24 , 2026 2 days 50 0
  • வடகிழக்குப் பருவமழை ஜனவரி 19, 2026 அன்று தமிழ்நாட்டிலிருந்து விலகியதாக, சென்னை பிராந்திய வானிலை ஆய்வு மையத்தினால் (RMC) உறுதிப்படுத்தப்பட்டது.
  • பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டிற்கு முக்கிய மழைக்காலமாகும்.
  • குறைந்தபட்ச வெப்பநிலையானது பல இடங்களில் இயல்பை விட 2-3°C குறைவாக இருந்ததுடன் இந்த விலகல் மூடுபனி நிறைந்த காலை மற்றும் குளிர்ந்த இரவுகளுக்கு வழி வகுத்தது.
  • ஜனவரி 20, 2026 அன்று, திருத்தணியில் மிகக் குறைந்த சமவெளிப் பகுதி வெப்பநிலை 15.2°C ஆகவும், கொடைக்கானலில் மலைப்பகுதிகளில் 6°C ஆகவும் பதிவாகியுள்ளது.
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் குளிரான இரவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதுடன், வறண்ட வானிலை மற்றும் தெளிவான வானம் ஜனவரி 22, 2026 ஆம் தேதி வரை தொடரும்.
  • தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி அதிகரிப்பதால், ஜனவரி 23 முதல் கடலோரப் பகுதிகளில் தொடங்கி லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
  • பல மாவட்டங்களில் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளதுடன், ஜனவரி 1, 2026 ஆம் தேதி முதல் தமிழ்நாடு குளிர்கால மழைப் பொழிவு 25.8 மிமீ அதிகமாகப் பதிவாகி உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்