வடகிழக்குப் பருவமழை ஜனவரி 19, 2026 அன்று தமிழ்நாட்டிலிருந்து விலகியதாக, சென்னை பிராந்திய வானிலை ஆய்வு மையத்தினால் (RMC) உறுதிப்படுத்தப்பட்டது.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டிற்கு முக்கிய மழைக்காலமாகும்.
குறைந்தபட்ச வெப்பநிலையானது பல இடங்களில் இயல்பை விட 2-3°C குறைவாக இருந்ததுடன் இந்த விலகல் மூடுபனி நிறைந்த காலை மற்றும் குளிர்ந்த இரவுகளுக்கு வழி வகுத்தது.
ஜனவரி 20, 2026 அன்று, திருத்தணியில் மிகக் குறைந்த சமவெளிப் பகுதி வெப்பநிலை 15.2°C ஆகவும், கொடைக்கானலில் மலைப்பகுதிகளில் 6°C ஆகவும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் குளிரான இரவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதுடன், வறண்ட வானிலை மற்றும் தெளிவான வானம் ஜனவரி 22, 2026 ஆம் தேதி வரை தொடரும்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி அதிகரிப்பதால், ஜனவரி 23 முதல் கடலோரப் பகுதிகளில் தொடங்கி லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பல மாவட்டங்களில் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளதுடன், ஜனவரி 1, 2026 ஆம் தேதி முதல் தமிழ்நாடு குளிர்கால மழைப் பொழிவு 25.8 மிமீ அதிகமாகப் பதிவாகி உள்ளது.