வடகிழக்குப் பிராந்திய மாவட்டங்களின் SDG குறியீடு (2023–24)
July 11 , 2025 3 days 27 0
2023–24 ஆம் ஆண்டிற்கான வட கிழக்குப் பிராந்திய மாவட்டங்களின் நிலையான மேம்பாட்டு இலக்குகள் (SDG) குறியீட்டின் இரண்டாவது பதிப்பு ஆனது நிதி ஆயோக் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் குறியீடு ஆனது SDG குறிகாட்டிகளில் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 121 மாவட்டங்களின் முன்னேற்றத்தை அளவிடுகிறது.
முந்தைய பதிப்பை விட சுமார் 85% மாவட்டங்கள் இந்தக் கூட்டு மதிப்பெண்களில் ஒரு அதிகரிப்பைக் காட்டின.
மிசோரம், சிக்கிம் மற்றும் திரிபுராவின் அனைத்து மாவட்டங்களும் ஒரு முன்னணி அந்தஸ்தைப் பெற்றன.
மிசோரமில் உள்ள ஹனாதியல் சிறப்பான செயல் திறன் கொண்ட ஒரு மாவட்டமாக உள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லாங்டிங் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒரு மாவட்டம் ஆகும்.
நாகாலாந்து மாநிலமானது, அதன் 3 மாவட்டங்களுடன் சேர்த்து முதல் 10 செயல்திறன் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
சிக்கிம் அதன் மாவட்டங்களில் மிகக் குறைந்த மதிப்பெண் இடைவெளியுடன் மிகவும் நிலையான செயல்திறனைக் கொண்டிருந்தது.
இப்பிராந்தியம் முழுவதும் 93 மாவட்டங்களில் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஆகிய பிரிவுகளில் மேம்பட்ட மதிப்பெண்கள் பதிவாகின.
இந்த பிராந்தியத்தில் எந்த மாவட்டமும் சாதனை மாவட்டமாகவோ அல்லது சாதனை நிலையை எட்டும் நோக்கமுள்ள மாவட்டங்கள் பிரிவிலோ இணையவில்லை.