TNPSC Thervupettagam

வடகிழக்கு இந்தியாவில் ஒருங்கிணைந்த வேளாண்மை

July 29 , 2026 16 hrs 0 min 25 0
  • அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச விவசாயிககள் அபாயங்களைக் குறைக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும், பருவநிலையைத் தாங்கும் விவசாய நிலங்களை உருவாக்கவும் ஒருங்கிணைந்த வேளாண்மை முறைகளை (IFS) பின்பற்றி வருகின்றனர்.
  • IFS என்பது பயிர்கள், கால்நடைகள், மீன்குட்டைகள், கோழிகள், பன்றிகள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது, இதில் ஒரு பிரிவிலிருந்து கிடைக்கும் கழிவு மற்றொரு பிரிவிற்கு இடுபொருளாக மாறுகிறது.
  • இந்த அணுகுமுறை ரசாயன உரங்கள் மற்றும் வெளிப்புற இடுபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது, அதே நேரத்தில் மண் வளம் மற்றும் வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது.
  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (NABARD) ஆதரவுடன் செயல்படும் கிராம முன்னேற்றத்திற்கான கூட்டு முன்னெடுப்புத் (JIVA) திட்டம், இப்பகுதியில் ஒருங்கிணைந்த வேளாண்மையை ஊக்குவிக்கிறது.
  • ஒருங்கிணைந்த வேளாண்மை சிறு விவசாயிகளுக்கு வருமான ஆதாரங்களைப் பன்முகப்படுத்தவும், வளங்களைப் பாதுகாக்கவும், பருவநிலை தொடர்பான சவால்களில் இருந்து சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்