TNPSC Thervupettagam

வடகிழக்கு எரிவாயு குழாய்த் தொடர்

January 11 , 2020 2005 days 884 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவானது வடகிழக்கு எரிவாயு குழாய்த் தொடர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தக் குழாய்த் தொடரானது சுமார் 1,656 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
  • வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மணிப்பூர், மேகாலயா, அசாம், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களில் இந்த எரிவாயு குழாய்த் தொடர் உருவாக்கப்பட உள்ளது.
  • இந்தத் திட்டம் பின்வரும் 5 பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்
    • ஓஎன்ஜிசி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்),
    • ஐஓசிஎல் (இந்தியன் எண்ணெய்க் கழகம்),
    • OIL (இந்திய எண்ணெய் நிறுவனம்),
    • கெயில் (இந்திய எரிவாயு ஆணையம்) மற்றும்
    • என்ஆர்எல் (நுமாலிகார்ஹ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம்).
  • இந்தக் கூட்டு முயற்சிக்கு ஐஜிஜிஎல் (இந்திர தனுஷ் எரிவாயுத் தொடர்) என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த எரிவாயுத் தொடர் திட்டத்திற்கு 5,559 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த திட்டமானது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தினால் கண்காணிக்கப்பட இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது இந்திய அரசின் இலட்சியத் திட்டமான உர்ஜா கங்கா எரிவாயு குழாய் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்