வடக்கு ஐரோப்பிய நாடுகளைச் சுற்றி அமைக்கப்படும் அணை
February 20 , 2020 1993 days 710 0
காலநிலை மாற்றத்தின் விளைவாக 15 வட ஐரோப்பிய நாடுகளின் பல இலட்சக் கணக்கான மக்களையும் முக்கியமான பொருளாதாரப் பகுதிகளையும் உயரும் கடல்நீர் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க ஒரு பெரிய அணை அமைக்கும் திட்டமானது முன்மொழியப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 637 கி.மீ நீளமுள்ள இரண்டு அணைகள் கட்டப்பட உள்ளன.
முதலாவது அணையானது வடக்கு அயர்லாந்து மற்றும் மேற்கு நார்வே ஆகிய பகுதிகளுக்கு இடையே கட்டப்பட உள்ளது.
இரண்டாவது அணையானது பிரான்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளுக்கு இடையே கட்டப்பட உள்ளது.