வடக்கு கியூபெக்கில் உள்ள மிகப் பழமையான பாறை – கனடா
July 2 , 2025 3 days 38 0
வடக்கு கியூபெக்கில் உள்ள நுவ்வாகிட்டக் கிரீன்ஸ்டோன் மண்டலம் என்று அழைக்கப் படுகின்ற ஒரு பாறைப் பகுதியானது பூமியின் பழமையான பாறைகளைக் கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தப் புதிய ஆராய்ச்சியானது, இந்தப் பாறைகள் ஆனது புவியின் ஆரம்ப காலமான ஹேடியன் என்ற யுகத்தினைச் சேர்ந்ததாக சுமார் 4.16 பில்லியன் ஆண்டுகள் மிகவும் பழமையானவை என்பதைக் காட்டுகிறது.
ஹேடியன் காலமானது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி மிகவும் வெப்பமாகவும் நிலையற்றதாகவும் இருந்த போது தொடங்கியது.