TNPSC Thervupettagam

வடிவமைப்பு வள மையம் – சென்னை

August 19 , 2021 1460 days 606 0
  • மத்திய ஜவுளித்துறை அமைச்சகமானது சென்னையில் உள்ள நெசவாளர் சேவை மையத்தில் ஒரு வடிவமைப்பு வள மையத்தை அமைத்து வருகிறது.
  • கைத்தறித் துறையில் சிறப்பான வடிவமைப்பு அம்சத்தினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.  
  • நெசவாளர்கள், ஏற்றுமதியாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் தங்களது மாதிரிகள் / தயாரிப்புப் பொருட்களை மேம்படுத்துவதற்காக வேண்டி இந்த வடிவமைப்புக் களஞ்சியங்களை அணுகச் செய்வதும் இதன்  நோக்கமாகும்.
  • மத்திய ஜவுளித்துறை அமைச்சகமானது இதற்காக தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
  • இதே போன்ற வள மையங்கள் ஏழு மையங்களில் முன்பே அமைக்கப் பட்டுள்ளன.
  • அவற்றுள் காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மையமானது சமீபத்தில் திறந்து வைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்