வட மத்திய இரயில்வேயானது (North Central Railways - NCR) இரண்டு கைபேசி செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
என்சிஆர் ராஸ்தா (NCR RASTA) - தனது பணியாளர்களுக்காக
யாத்ரி ராஸ்தா (Yatri RASTA) - தனது பயணிகளுக்காக
“NCR RASTA” (தொகுக்கப்பட்ட இரயில்வே சொத்துக்களின் சுருக்கமான பின்தொடர் செயலி) என்ற செயலியானது இரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காகவும் அனைத்து இரயில்வே சொத்துகளை துல்லியமாகக் கணக்கிடுவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“Yatri RASTA” என்ற செயலியானது (நிலைய கண்காணிப்பிற்கான இரயில்வே அணுகுமுறைக்கான செயலி) பொது மக்கள் இரயில் நிலையங்களை எளிதில் கண்டுபிடிக்க உதவுகிறது.