TNPSC Thervupettagam

வனசக்தி தீர்ப்பின் மறுமதிப்பாய்வு

November 22 , 2025 6 days 44 0
  • உச்ச நீதிமன்ற அமர்வானது 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் வழங்கிய, திட்ட நிறைவிற்குப் பிந்தைய சுற்றுச்சூழல் அனுமதிகளை (EC) நிறுத்திய அதன் வனசக்தி உத்தரவை மாற்றியுள்ளது.
  • சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986 மற்றும் 1994/2006 EIA (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு) அறிவிப்புகள் ஆனது, பணிகளைத் தொடங்குவதற்கு முன் திட்டங்களுக்கு EC பெற வேண்டும் என்று கோருகின்றன.
  • காமன் காஸ் (2017) மற்றும் அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் (2020) போன்ற முந்தைய வழக்குகளில், முன் கூட்டிய EC கட்டாயமாக இருக்கும் சூழல்களில், திட்ட நிறைவிற்குப் பிந்தைய EC அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டது.
  • இந்தப் புதிய முடிவு ஆனது, முக்கிய வளங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருக்கும் போது, ​​பொதுவாக அபராதங்களுடன், திட்ட நிறைவிற்குப் பிந்தைய EC பெறுவதற்கான ஒரு சிறிய வாய்ப்பினை அனுமதிக்கிறது.
  • சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது "EC பெறுவது முதன்மையானது" என்ற கொள்கையினை முக்கிய விதியாக வைத்திருக்க வேண்டும் என்றும், அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே திட்ட நிறைவிற்குப் பிந்தைய EC விதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்