சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் (MoEF&CC) 2017 ஆம் ஆண்டு அறிவிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அதனை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது.
அந்த அறிவிப்பானது இந்தத் திட்டங்களுக்கு முன்தேதியிட்ட அனுமதிகளை வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது.
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளுக்கான முன் அனுமதிக்காக தொழில்துறைகள் விண்ணப்பிப்பதற்கு ஆறு மாத கால அவகாசம் கொண்ட "ஒற்றை" வாய்ப்பினை வழங்கும் அறிவிப்பை MoEF&CC வெளியிட்டது.
இந்த முன்தேதியிட்ட அனுமதிகள் சுற்றுச்சூழல் சட்டத்திற்குப் புறம்பானவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக வேண்டி, பொது நலன் Vs இந்திய ஒன்றியம் (2017) இடையிலான வழக்கு மற்றும் அலெம்பிக் பார்மாசூட்டிக்கல்ஸ் Vs ரோஹித் பிரஜாபதி (2020) இடையிலான வழக்கு ஆகிய இரண்டு முந்தைய வழக்குகளில் வழங்கப்பட்டத் தீர்ப்புகளை நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுக் காட்டியது.