TNPSC Thervupettagam

வனவிலங்குகளுக்கான கூட்டங்கள் 2026

July 13 , 2026 16 hrs 0 min 20 0
  • தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) 91-வது நிலைக்குழுக் கூட்டம், மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் (CZA) 46-வது கூட்டம் மற்றும் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) 29-வது கூட்டம் ஆகியவை 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நடைபெற்றன.
  • தேசிய வனவிலங்கு வாரியம் (NBWL) என்பது 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஆலோசனைக் குழுவாகும் என்பதோடு இதன் தலைவராக பிரதமர் செயல்படுகிறார்.
  • இது வனவிலங்குப் பாதுகாப்பு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குகிறது மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பாதிக்கும் திட்டங்களை ஆய்வு செய்து அனுமதி அளிக்கிறது.
  • மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் (CZA) என்பது 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் (1991 திருத்தம்) கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும் என்பதுடன் இதன் தலைவராக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை (MoEFCC) அமைச்சர் செயல்படுகிறார்.
  • இது வனவிலங்குப் பாதுகாப்பு, கல்வி மற்றும் அறிவியல் மேலாண்மையை மேம்படுத்துவதற்காக உயிரியல் பூங்காக்களை ஒழுங்குபடுத்துகிறது, அங்கீகரிக்கிறது மற்றும் கண்காணிக்கிறது.
  • தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) என்பது 2006 ஆம் ஆண்டுத் திருத்தத்தின் மூலம் 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும், மேலும் இதன் தலைவராக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை (MoEFCC) அமைச்சர் செயல் படுகிறார்.
  • இது புலிகள் திட்டத்தை செயல்படுத்துகிறது, புலிகள் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது மற்றும் புலிகள் காப்பகங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.
  • NBWL கூட்டத்தின் போது, வனவிலங்கு அனுமதி தேவைப்படும் 100-க்கும் மேற்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன என்பதுடன் CZA கூட்டத்தில் உயிரியல் பூங்கா நவீனமயமாக்கல் மற்றும் வனவிலங்கு சுகாதாரம் குறித்தும், NTCA கூட்டத்தில் புலிகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்