TNPSC Thervupettagam

வனவிலங்கு நீதி ஆணைய அறிக்கை

May 7 , 2025 11 hrs 0 min 30 0
  • உலக வனவிலங்கு நீதி ஆணையமானது, “இடையூறு மற்றும் குழப்பம்: எறும்புத் திண்ணிகளின் எண்ணிக்கை மற்றும் தந்த கடத்தல் பற்றியப் பகுப்பாய்வு 2015–2024” என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இதில் எறும்புத் திண்ணிகளின் செதில்கள் மற்றும் யானை தந்தங்களின் உலகளாவிய கடத்தல் 2020 ஆம் ஆண்டு முதல் அதிகளவில் குறைந்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில், உலகளவில் பறி முதல் செய்யப்பட்ட எறும்புத் திண்ணிகளின் செதில்கள் 100 டன்களுக்கும் அதிகமான அளவினை எட்டின.
  • அந்த ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களும் 50 டன்களாக உயர்ந்தன.
  • 2015 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உலகளவில் 370 டன்களுக்கும் அதிகமான எறும்புத் திண்ணி செதில்கள் கைப்பற்றப்பட்டன.
  • 2024 ஆம் ஆண்டில், கைப்பற்றப்பட்ட எறும்புண்ணி செதில்கள் மற்றும் தந்தங்களின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டதை விட முறையே சுமார் 84 சதவீதம் மற்றும் 74 சதவீதம் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்