TNPSC Thervupettagam

வனவிலங்கு மற்றும் வனத் திருத்த மசோதாக்கள், 2025

September 19 , 2025 15 hrs 0 min 11 0
  • கேரள அமைச்சரவையானது 2025 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு (திருத்தம்) மசோதா வரைவை அங்கீகரித்தது.
  • குடியிருப்பு பகுதிகளில் மக்களைத் தாக்கி காயப்படுத்தும் வன விலங்குகளை உடனடியாகக் கொல்ல உத்தரவிட தலைமை வனவிலங்குப் பாதுகாவலருக்கு இது அதிகாரம் அளிக்கிறது.
  • வன விலங்குகளின் தாக்குதல்களின் போது பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக இந்தியாவில் எந்தவொரு மாநிலமும் மேற்கொள்ளும் முதல் சட்டத் திருத்தம் இதுவாகும்.
  • தற்போதுள்ள 1972 ஆம் ஆண்டின் மத்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் காணப் படும் நேர விரயம் கொண்ட நடைமுறைகளை இது நீக்குகிறது.
  • II அட்டவணையில் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தால், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் பிறப்புக் கட்டுப்பாடு மற்றும் இடமாற்றம் ஆகியவற்றிற்கான விதிகளை வழங்குகிறது.
  • எந்தவொரு அட்டவணை II வன விலங்கையும் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விலங்காக அறிவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது என்பதோடு இது முன்னர் மத்திய அரசால் மட்டுமே அறிவிக்கப்படக் கூடியதாக இருந்தது.
  • மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விலங்காக அறிவிக்கப்பட்டவுடன், அத்தகைய விலங்குகளை யார் வேண்டுமானாலும் கொல்லலாம் என்பதோடு அவற்றின் இறைச்சியை உட்கொள்ளலாம்.
  • பலமுறை கோரிக்கைகள் இருந்த போதிலும், மத்திய அரசானது காட்டுப்பன்றிகளை மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விலங்காக அறிவிக்கவில்லை; அவற்றைக் கட்டுப்படுத்த உள்ளாட்சித் தலைவர்களைக் கௌரவ வனவிலங்கு காப்பாளர்களாக மாநில அரசு நியமித்தது.
  • இது போனட் மக்காக்குகளை (குல்லாய் குரங்குகளை) I ஆம் அட்டவணையிலிருந்து II ஆம் அட்டவணைக்கு மாற்ற முன்மொழிகிறது.
  • வனத்துறையானது விற்பனை நிலையங்கள் மூலம் தனியார் நிலத்தில் சந்தன மரங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் 2025 ஆம் ஆண்டு வரைவு கேரள வன (திருத்த) மசோதாவையும் அங்கீகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்