TNPSC Thervupettagam

வன உரிமைகள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

November 15 , 2026 6 hrs 0 min 39 0
  • காப்புக் காடுகளுக்குள் வணிகப் பயிர் சாகுபடி செய்வதற்கு 2006 ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின் (FRA) கீழ் பாதுகாப்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
  • வாழ்வாதாரத்திற்காக வனங்களைச் சார்ந்திருக்கும் வனவாழ் பழங்குடியினர் (FDSTs) மற்றும் இதர பாரம்பரிய வனவாசிகளின் (OTFDs) உரிமைகளை இச்சட்டம் அங்கீகரிக்கிறது.
  • பிரிவு 3(1)(c)-இன் கீழ், தகுதியுடைய வனவாசிகளுக்கு சிறு வனப் பொருட்களை (MFP) சேகரிக்கவும், பயன்படுத்தவும் மற்றும் விற்பனை செய்யவும் உரிமை உண்டு.
  • தமிழ்நாட்டில் உள்ள அகத்தியமலை உயிர்க்கோளக் காப்பகத்தில் பட்டுப் பருத்தி சாகுபடி செய்வது தொடர்பான வழக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 5,072.64 ஹெக்டேர் வன நிலத்தில் சுமார் 3,637.83 ஹெக்டேர் பரப்பளவில் பட்டுப் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • பட்டுப் பருத்தி என்பது ஒரு சிறு வனப் பொருள் என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஆய்வு செய்யுமாறு மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு (CEC) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • திட்டமிடப்பட்ட வணிக ரீதியான சாகுபடியை 2006 ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின் கீழ் வன உரிமையாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்