TNPSC Thervupettagam

வன உரிமைகள் சட்டம் (FRA) தொடர்பான பிரச்சினை

August 6 , 2026 6 days 67 0
  • சமூக வன வள மேலாண்மைத் திட்டங்கள் (CFRMP) குறித்து பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) விடுத்த தகவல்தொடர்பு, கிராம சபையின் அதிகாரங்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
  • வனத்துறையின் செயல்பாட்டுத் திட்டங்களுடன் சமூக வன வள மேலாண்மைத் திட்டங்களை ஒருங்கிணைக்குமாறு மாநிலங்களை அந்த கடிதம் கேட்டுக் கொண்டு உள்ளது.
  • 2006 ஆம் ஆண்டின் வன உரிமைகள் சட்டம் (FRA), சமூக வன உரிமைகளைத் தீர்மானிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் கிராம சபையை முதன்மை அதிகார அமைப்பாக அங்கீகரிக்கிறது.
  • வன உரிமைகள் சட்டம் 2006 இன் பிரிவு 5-இன் கீழ், காடுகள், வனவிலங்குகள் மற்றும் பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கும், பேணுவதற்கும், நிர்வகிப்பதற்கும் கிராம சபைகளுக்கு அதிகாரங்கள் உள்ளன.
  • பழங்குடியினர் (STs) மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளின் உரிமைகளை அங்கீகரிப்பதையும், வரலாற்று ரீதியான அநீதிகளைச் சரிசெய்வதையும் வன உரிமைகள் சட்டம், 2006 நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்